32 கிலோ முந்திரி மாலையில் பவளவண்ண பெருமாள் அருள்
திருவொற்றியூர்:திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், நான்கு சனிக்கிழமைகளில் உற்சவருக்கு, விசேஷ அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, புரட்டாசி - இரண்டாவது சனிக் கிழமையான நேற்று காலை, உற்சவர் ஸ்ரீ தேவி - பூதேவி சமேத பவள வண்ண பெருமாளுக்கு, 32 கிலோ முந்திரி, பாதாம், செரி, கிவி உள்ளிட்ட உலர் பழங்களால் பிரத்யேகமாக செய்யப்பட்ட மாலை, ஜடை, கிரீடம் அணி விக்கப்பட்டது. பெருமாளின், விசேஷ அலங்காரத்தை காண, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். தவிர, சக்கரத்தாழ்வாரின் ஓவியம், மைய மண்டபத்தில், அழகுற வரையப் பட்டதை கண்டு வியந்தனர்.