உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துப்பட்டாவில் கைகளை கட்டிக்கொண்டு கடலில் குதித்து தற்கொலை செய்த சிறுவன், சிறுமி

துப்பட்டாவில் கைகளை கட்டிக்கொண்டு கடலில் குதித்து தற்கொலை செய்த சிறுவன், சிறுமி

சென்னை: திருவொற்றியூரில் 14 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி இருவரும் துப்பட்டாவால் கைகளை கட்டிக்கொண்டு, கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். சென்னை மாதாவரம் பால் பண்ணை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி திருவொற்றியூர் கடற்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இருவரும் கைகளில் துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கடலில் குதித்து தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்த சிறுவர், சிறுமி இருவருக்கும் டியூஷனில் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 7 மாதங்களாக இருவரும் காதலித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ganesun Iyer
மே 25, 2024 12:58

ரீல்ஸ்கள், மேலும் விஷம் விதைக்கின்றன....


Mani . V
மே 24, 2024 21:16

கேடு கெட்ட, தரம் கெட்ட சினிமா, டிவி சீரியல்களுக்கு, டிவி ரியாலிட்டி ஷோக்களுக்கு வாழ்த்துக்கள்.


KOVAIKARAN
மே 25, 2024 06:33

உண்மை. தற்போதுள்ள இளைய சமுதாயம் குறிப்பாக மாணவர் சமுதாயம் கெட்டுப் போவதற்கு டிவி, சீரியல்கள், டிவி ரியாலிட்டி ஷோக்கள் மட்டுமல்ல, டாஸ்மாக், அதிகரிக்கும் போதை கலாசாரம் ஆகியவையும் முக்கிய காரணம். உதாரணம், புனேயில் 17 வயது சிறுவன் போர்ஷே காரை போதையில் ஒட்டிக்கொண்டு சென்று இரண்டு பேர் மரணத்திற்கு காரணமாக இருந்தது.


மேலும் செய்திகள்



புதிய வீடியோ