அமெரிக்க துாதரகம் முன் ஆர்ப்பாட்டம் 40 பேர் கைது
சென்னை,இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுவதாக கூறி, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.சென்னை, அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துாதரகம் முன், நேற்று மாலை 5:45 மணி முதல் 6:40 வரை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சித் தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் 40 நபர்கள் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தின்போது, 'அமெரிக்காவுக்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து, அருகில் உள்ள சமூக நலக் கூடத்தில் சிறை வைத்தனர்.