மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் சங்கரமடத்தில் கந்தசஷ்டி பாராயணம்
05-Nov-2024
பள்ளி மாணவி துாக்கிட்டு தற்கொலை
15-Nov-2024
சென்னை,ஆதம்பாக்கம், சங்கரமடத்தில் உலக நன்மைக்காக, இன்று முதல், 40 நாட்களுக்கு, சிறப்பு வேத பாராயணம் நடைபெற உள்ளது.நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:ஹிந்து மதத்தின் ஆணி வேர் வேதங்கள்.அதை காப்பதற்காக, வேத பாராயணம் மிக அவசியமாகிறது. அதன் பொருட்டும், உலக நன்மைக்காகவும், ஆதம்பாக்கம் ஸ்ரீசங்கர மடத்தில் இன்று முதல், டிச., 26ம் தேதி வரை, 40 நாட்கள் வேத பாராயணம் நிகழ்த்தப்படுகிறது.இதை திருச்சி, ராதாகிருஷ்ண கனபாடிகள் மகனும் ஹைதராபாத் சூர்யநாராயண கனபாடிகளின் சீடருமான பாஸ்கர கனபாடிகள்நிகழ்த்துகிறார். 1 லட்சத்து 55 ஆயிரத்து 33 பதங்களைக் கொண்ட ரிக்வேதத்தை, அவர்கனபாட முறையில் மனப்பாடமாக நிகழ்த்த உள்ளார்.இதற்கான ஏற்பாடுகளை, எஸ்.ஜி.வி.எஸ்., அறக்கட்டளை நிறுவனர் ராம்குமார சாஸ்த்ரிகள் தலைமையிலான ஒருங்கிணைப்பாளர்கள் செய்துள்ளனர்.
05-Nov-2024
15-Nov-2024