உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.17.60 லட்சம் கஞ்சா பதுக்கல் தாம்பரம் அருகே 5 பேர் கைது

ரூ.17.60 லட்சம் கஞ்சா பதுக்கல் தாம்பரம் அருகே 5 பேர் கைது

தாம்பரம், சேலையூரை அடுத்த கவுரிவாக்கத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த திரிபுராவை சேர்ந்த ஆலங்கீர் உசேன், 28, சுனில் தாஸ், 23 ஆகிய இருவரைதாம்பரம் மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து, 12 கிலோகஞ்சாவை பறிமுதல் செய்தனர். தாம்பரம் -- திருநீர்மலை சாலை, மேற்கு தாம்பரம் சுடுகாடு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த, கும்பிடிப்பூண்டியை சேர்ந்த யுவராஜ், 30, என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இதேபோல், வி.ஜி.என்., ஐஸ்வர்யா அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த தருண் சாகா, 45, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நரேந்திர நாயக், 33 ஆகிய இருவரை கைது செய்து, 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களிடம் இருந்து, 17.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 44 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை