| ADDED : ஜன 30, 2024 12:01 AM
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, வண்டலுார் -- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், பூந்தமல்லி வட்டார போக்குவரத்து இன்ஸ்., காவேரி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது, கோயம்பேடில் இருந்து நாகர்கோவில் மற்றும் கோவை செல்லும் இரண்டு ஆம்னி பேருந்துகளை நிறுத்தினர். பேருந்தில், பயணியர் இருந்தனர். தடை உத்தரவை மீறி, கோயம்பேடில் இருந்து பயணியரை ஏற்றி வந்தது தெரிந்தது.இதையடுத்து, இரண்டு ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்த ஆர்.டி.ஓ., மற்றும் போலீசார், அதில் பயணித்த 24 பயணியரை மாற்று பேருந்தில், அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பினர்.இந்த இரு பேருந்துகள் உட்பட கோயம்பேடில் இரண்டு, வானகரத்தில் இரண்டு என, மொத்தம் ஆறு ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.கோயம்பேடில் இருந்து பயணியரை ஏற்றிச் செல்ல, கடந்த 24ம் தேதியில் இருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி பயணியரை ஏற்றியதாக இதுவரை, ஒன்பது பேருந்துகள் பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் உரிமையாளர்கள், பேருந்துகளை விடுவிக்க கோரி, அதிகாரிகளுடன் பேச்சு நடத்துகின்றனர்.