மேலும் செய்திகள்
பள்ளி மேலாளர் வீட்டில் நகை மாயம்
03-Jan-2025
குன்றத்துார்,தாம்பரம் அடுத்த கரசங்கால் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார், 24; ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை பொறியாளர்.செல்வகுமாரின் மனைவி தமிழரசிக்கு, டிச., 21ல் பெண் குழந்தை பிறந்துள்ளது. திருக்கழுக்குன்றத்தில் பெற்றோர் வீட்டில் இருக்கும் மனைவி மற்றும் குழந்தையை பார்க்க, செல்வகுமார் சென்றார். நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பியபோது, பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்து 60 சவரன் நகை மாயமானது தெரிந்தது. மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Jan-2025