உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பஸ்சில் வந்த பெண்ணின் 65 சவரன் நகைகள் மாயம்

பஸ்சில் வந்த பெண்ணின் 65 சவரன் நகைகள் மாயம்

அரும்பாக்கம், அரும்பாக்கம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அருண், 45; தனியார் நிறுவன ஊழியர்.இவரது மனைவி செல்வி, 39. திருவண்ணாமலை, போளூரில் உள்ள தந்தையை பார்த்துவிட்டு, நேற்று முன்தினம் அரசு விரைவு பேருந்தில், சென்னை கோயம்பேடிற்கு வந்துள்ளார்.பின், அங்கிருந்து ஆட்டோவில் அரும்பாக்கத்தில் உள்ள தன் வீட்டிற்கு வந்துள்ளார். உடைமைகளை பார்த்தபோது, தான் கொண்டு வந்த, 65 சவரன் நகைகள் மட்டும் மாயமானது தெரிய வந்தது.இதுகுறித்து அரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரில், 'அரசு பேருந்தில் வரும்போது, பெட்டியில் நகை இருப்பதாக போனில் பேசி வந்தேன்; அதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகைகளை திருடி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது' என, குறிப்பிட்டிருந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை