உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடிநீர் குழாய் மாற்றி அமைக்க ரூ.69 கோடி

குடிநீர் குழாய் மாற்றி அமைக்க ரூ.69 கோடி

சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டலம், 195 மற்றும் 196வது வார்டில் உள்ள, கண்ணகி நகர், எழில்நகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 23,704 வீடுகள் உள்ளன.இங்கு, 1 லட்சம் பேருக்கு மேல் வசிக்கின்றனர். இவர்களுக்கு தினமும் 60 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இப்பகுதிகளுக்கான குடிநீர் குழாய் அமைத்து, 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. குழாய்கள் பழுதடைந்துள்ளதால், சீரான குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை.இந்நிலையில், குழாய்களை மாற்றி அமைக்க, 69.57 கோடி ரூபாய் தமிழக அரசு ஒதுக்கியது. இதில், 18 கி.மீ., துாரத்தில், 100 முதல் 400 மி.மீ., விட்டம் உடைய குடிநீர் பகிர்மான குழாய் மற்றும் 700 மீட்டர் நீளத்தில், 400 மி.மீ., விட்டம் உடைய பிரதான குழாய் பதிக்கப்பட உள்ளது.இதன் வாயிலாக, 38 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் தலா 300 லிட்டர் கொள்ளளவில், 15,656 எண்ணிக்கை சின்டெக்ஸ் தொட்டிகளை குடிநீர் நிரப்பப்படும். குழாய் பதிக்கும் பணி, நேற்று முன்தினம் துவங்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ