தாம்பரம், திருவள்ளூர் தடத்தில் 8 மின்சார ரயில்கள் ரத்து
சென்னை, சென்னை ரயில்வே கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடற்கரை - தாம்பரம் இரவு 8:25, 8:55, 10:20 மணி ரயில்கள் வரும் 23ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. திருவள்ளூர் - கடற்கரை இரவு 9:35, கடற்கரை - திருவள்ளூர் இரவு 8:05 மணி ரயில்கள் வரும் 23ம் தேதியிலும், கடற்கரை - அரக்கோணம் அதிகாலை 4:05 மணி ரயில் வரும் 24ம் தேதியில் ரத்து செய்யப்படுகிறது.மேலும், கும்மிடிப்பூண்டி - கடற்கரை இரவு 9:55, கடற்கரை - கும்மிடிப்பூண்டி இரவு 10:45 மணி ரயில்கள் வரும் 23ம் தேதி ரத்து செய்யப்படுகிறது கடற்கரை - தாம்பரம் இரவு 11:05, 11:30, 11:59 மணி ரயில்கள் வரும் 23ம் தேதி கடற்கரையில் இருந்து இயக்கப்படும். கடற்கரை - செங்கல்பட்டு அதிகாலை 3:50 மணி ரயில் வரும் 24ம் தேதி எழும்பூரில் இருந்து செல்லும். அதுமட்டுமல்லாமல், செங்கல்பட்டு - கடற்கரை இரவு 9:10, 10:10, 11:00 மணி, திருமால்பூர் - கடற்கரை இரவு 8:00 மணி ரயில்கள் வரும் 23ம் தேதி எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும். மேலும், கூடுவாஞ்சேரி - கடற்கரை இரவு 10:10, 10:40, 11:15 மணி ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.