உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீனவர் வலையில் சிக்கிய 800 கிலோ திருக்கை மீன்

மீனவர் வலையில் சிக்கிய 800 கிலோ திருக்கை மீன்

காசிமேடு:புரட்டாசி மாதம் முடிந்து, ஐப்பசி துவங்கிய நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று, சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன்கள் வாங்க, ஏராளமானோர் குவிந்தனர்.கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பின. அவற்றில் கானாங்கத்தை, பாறை உள்ளிட்ட மீன்களின் வரத்து அதிகம் இருந்தது.மேலும், ஒரு விசைப் படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு, 13 அடி நீளம், 800 கிலோ எடை உடைய ராட்சத திருக்கை மீன் சிக்கியுள்ளது.இதை மீனவர்கள் படகில் ஏற்றிக் கொண்டு கரை திரும்பினர். திருக்கை மீனை மீனவர்கள், 'கிரேன்' வாயிலாக, படகில் இருந்து கரைக்கு கொண்டு வந்தனர். இந்த ராட்சத திருக்கை மீன் ஏலம் விடப்பட்டு, வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் என, மீனவர்கள் தெரிவித்தனர்.வஞ்சிரம் 650 - 1,000; வெள்ளை வவ்வால் 800 - 900; பெரிய பாறை 300 - 400; சங்கரா 300 - 400 உள்ளிட்ட மீன்கள் நல்ல விலைக்கு விற்றதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி