| ADDED : மார் 06, 2024 12:34 AM
பூந்தமல்லி, பூந்தமல்லியில், குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தது.பூந்தமல்லி ராமானுஜர் கூடம் தெருவில், தனியார் மகளிர் விடுதி உள்ளது. இதன் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து, பிப்.,15ம் தேதி பச்சிளம் குழந்தை ஒன்றை, அதே பகுதியைச் சேர்ந்த யுவராணி என்பவர் மீட்டு, எழும்பூர் குழந்தைகள் மருத்துவனையில் அனுமதித்தார்.இதுகுறித்து, பூந்தமல்லி போலீசார் விசாரித்து வந்தனர்.இந்நிலையில், விடுதியில் தங்கியிருந்த பெண்ணும், அவரது காதலனும், குழந்தையை குப்பைத் தொட்டியில் தாங்கள் தான் வீசியதாகக் கூறி, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராகினர்.இவர்களின் டி.என்.ஏ., குழந்தையின் டி.என்.ஏ.,வுடன் ஒத்துப்போகிறதா என சோதனை நடந்து வருகிறது.இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை, நேற்று இறந்தது.பூந்தமல்லி போலீசார், குழந்தையின் உடலை மீட்டனர்.டி.என்.ஏ., முடிவுகள் வெளியான பின், காதல் ஜோடி மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.