உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டிப்பர் லாரி மோதி ஏட்டு மகன் பலி

டிப்பர் லாரி மோதி ஏட்டு மகன் பலி

திருவொற்றியூர் :வண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசிப்பவர் ஆயிஷா பீவி. திருவொற்றியூர் மகளிர் காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். அவரது மகன் அனிப், 17, பிளஸ் 2 மாணவர்.நண்பர்கள் முகமது ஹனிப், 21, சைப், 18, ஆகியோருடன் சேர்ந்து, ராயபுரத்தில் இருந்து எர்ணாவூர் நோக்கி, எண்ணுார் விரைவு சாலையில் நேற்று மாலை, இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். இதில், அனிப், 'டியூக்' இருசக்கர வாகனத்தில் தனியாக சென்றார்.திருவொற்றியூர், பட்டினத்தார் கோவில் சந்திப்பு அருகே, அதே திசையில் பின்னால் வந்த டிப்பர் லாரி, பக்கவாட்டில் உரசியதில் அனிப்பின் இருசக்கர வாகனம், மைய தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அனிப் இறந்துவிட்டார்.வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த, டிப்பர் லாரி ஓட்டுநரான பெருமாள்சாமி, 56, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை