உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேனாம்பேட்டையில் பெண்கள் குடுமிபிடி சண்டையால் பரபரப்பு

தேனாம்பேட்டையில் பெண்கள் குடுமிபிடி சண்டையால் பரபரப்பு

சென்னை:சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் தம்பிதுரை; தி.மு.க., இலக்கிய அணி தென் சென்னை மாவட்ட துணை அமைப்பாளர். இவரது சகோதரர் வேலாயுதத்தின் மகன் தினேஷ், போலீசாரின் 'சி' பட்டியல் ரவுடி.தேனாம்பேட்டை தாமஸ் சாலை பகுதியில், நேற்று முன்தினம் இரவு ரகளையில் ஈடுபட்ட தினேஷை, போலீசார் பிடித்துச் சென்றனர்.தேனாம்பேட்டையில் உள்ள, தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக வேலை பார்க்கும் மணிகண்டன், அவரின் சகோதரி கவிதா ஆகியோரது தகவலின்படிதான் போலீசார் தினேஷை பிடித்து சென்றதாக, தம்பிதுரை தரப்பினர் கருதினர்.இதனால் மணிகண்டனிடம், தம்பிதுரை தகராறு செய்தார். இருவரும் கைகலப்பில் ஈடுபட்டதால், தம்பிதுரையின் கை விரலில் காயம் ஏற்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவனையில் அவர் சேர்க்கப்பட்டார்.இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த தம்பிதுரையின் மனைவி பாரதி, தன் தோழிகளான செல்வி, திரிஷா, வனஜா, பிரியா ஆகியோருடன் சேர்ந்து, மணிகண்டனின் சகோதரி கவிதாவுடன் குடுமிபிடி சண்டையில் ஈடுபட்டனர்.இச்சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ