உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வளைந்து செல்லும் கால்வாய் எதிர்ப்பு காரணமாக நேரானது

வளைந்து செல்லும் கால்வாய் எதிர்ப்பு காரணமாக நேரானது

குரோம்பேட்டை, குரோம்பேட்டையில், எம்.ஐ.டி., ரயில்வே கேட்டில், ஜி.எஸ்.டி., -- ராஜேந்திர பிரசாத் சாலைகளை இணைக்கும் வகையில், மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.குரோம்பேட்டை மார்க்கத்தில் உள்ள ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி அணுகு சாலையில், 2022ம் ஆண்டு மழைநீர் கால்வாய் கட்டும் பணி துவங்கியது. இப்பணி முழுமை பெறாமல் உள்ளதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.ஆகாஷ் நர்ஷிங் ஹோம் அருகே, சாலையோரத்தில் இருந்த மின்மாற்றியை அகற்றாமல், மழைநீர் கால்வாயை வளைந்து வளைந்து கட்ட பள்ளம் தோண்டப்பட்டது.இதற்கு, மக்கள் விழிப்புணர்வு சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, மின்மாற்றியை அகற்றி கால்வாயை நேராக கட்ட வேண்டும் என, சாலையில் படுத்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து, கால்வாய் கட்டும் பணி கைவிடப்பட்டது.ஆனாலும், அங்கிருந்த மின்மாற்றி அகற்றப்படாமல் அப்படியே இருந்தது. இது தொடர்பாக, தொடர் கோரிக்கை வைக்கப்பட்டது.இதையடுத்து, இடையூறாக இருந்த மின்மாற்றி அகற்றப்பட்டு, மழைநீர் கால்வாய் நேராக கட்டப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்