உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மயக்கப்பொடி துாவி கொள்ளை மகளிர் கும்பலுக்கு வலை

மயக்கப்பொடி துாவி கொள்ளை மகளிர் கும்பலுக்கு வலை

தண்டையார்பேட்டை, மயக்கப்பொடி துாவி பெண்ணிடமிருந்து, 25,000 ரூபாய் கொள்ளையடித்த இரு பெண்களை, போலீசார் தேடி வருகின்றனர்.கொருக்குப்பேட்டை, பெருமாள் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மனைவி அமுதா, 45; தண்டையார்பேட்டை, மேயர் பாசுதேவ் தெருவில், துணி தைக்கும் கடை வைத்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு, ஆட்டோவில் பர்தா அணிந்த வந்த இரு பெண்கள், பழைய துணியை கொடுத்து தைத்துக் கொடுக்கும்படி கேட்டுள்ளனர்.அதற்கு அமுதா, பழைய துணி தைப்பதில்லை எனக் கூறியுள்ளார். உடனே அப்பெண்கள், 'இது பழைய துணி கிடையாது' எனக் கூறி, பிரித்து உதறியுள்ளனர்.அப்போது, துணியில் இருந்த மயக்கப்பொடி அமுதா முகத்தில் படவே, அவர் மயங்கினார். உடனே அப்பெண்கள், அமுதாவின் கைப்பையை எடுத்துக் கொண்டு தப்பியுள்ளனர்.அந்த பையில், 25,000 ரூபாய், கிரெடிட் கார்டு, பீரோ சாவி உள்ளிட்டவை இருந்துள்ளன. இது குறித்து நேற்று, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் அமுதா புகார் அளித்தார்.அதன்படி, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து, போலீசார் அப்பெண்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை