மேலும் செய்திகள்
சிங்கப்பூர் விமானம் மீண்டும் தாமதம்
20-Sep-2024
சென்னை, சென்னை விமான நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு, மும்பை செல்லும், 'இண்டிகோ' விமானம் புறப்பட தயாராக இருந்தது. ஓடுபாதையில் ஓட தயாராகும்போது, விமானியின் கேபின் பகுதியில், அவசர கால கதவு திறப்பதற்கான அலாரம் ஒலித்தது.விசாரித்த போது, அவசர கால கதவு பகுதியில், மும்பையைச் சேர்ந்த வருண் பாரத், 45, என்ற பயணி இருந்தது தெரியவந்தது. தெரியாமல், எமர்ஜென்சி எனும் அவசர கால கதவை திறக்கும் பட்டனை அழுத்தியதாக அவர் கூறியுள்ளார். விமானி, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தந்தார். பின், பாதுகாப்பு அதிகாரிகள் பயணியிடம் விசாரித்தனர். அவரது மும்பை பயணமும் ரத்து செய்யப்பட்டு, சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால், விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாக 12:30 மணிக்கு புறப்பட்டு சென்றது. விமானம் தாமதம்
சென்னையில் இருந்து லண்டனுக்கு, காலை 5:30 மணிக்கு புறப்படும் 'பிரிட்டிஷ் ஏர்வேஸ்' விமானம், முன்னதாக அதிகாலை 3:30 மணிக்கு லண்டனில் இருந்து சென்னை வந்தடையும். ஆனால், நேற்று காலை 4 மணி நேரம் தாமதமாக 8:00 மணிக்கு தான் சென்னை வந்தது. பின், 4 மணி நேரம் தாமதமாக காலை 9:30 மணிக்கு லண்டன் புறப்பட்டு சென்றது. சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11:50 மணிக்கு புறப்பட வேண்டிய 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், 4 மணி நேரம் தாமதமாக சென்னைக்கு வந்தது. பின்ன, காலை 5:30 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது.விமானம் தாமதம் குறித்து, இரு விமான நிறுவனங்களும் பயணியருக்கு தகவல் முன்னதாக அனுப்பியும், பலருக்கு தகவல் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
20-Sep-2024