உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுவன் உட்பட ஏழு பேரை கடித்து குதறிய வெறிநாய்

சிறுவன் உட்பட ஏழு பேரை கடித்து குதறிய வெறிநாய்

மறைமலை நகர் : செங்கல்பட்டு அடுத்த வளர்குன்றம் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, 20க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. நேற்று காலை, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த ஜெயக்கொடி, 71, என்ற மூதாட்டி, தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றார்.அப்போது, அங்கு சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று, மூதாட்டியை கடித்தது. தொடர்ந்து, அதே கிராமத்தின் தெருக்களில் 16 வயது சிறுவன், மூன்று பெண்கள் உட்பட ஏழு பேரை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், வெறிநாய் கடித்துக் குதறியது. இவர்கள் அனைவரையும் மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சைக்கு பின், நால்வர் வீடு திரும்பிய நிலையில், மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அதிகரித்து வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த, உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை