உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எலும்புக்கூடாக மாறிய வடிகால் மூடி

எலும்புக்கூடாக மாறிய வடிகால் மூடி

எலும்புக்கூடாக மாறிய வடிகால் மூடி

ஓ.எம்.ஆர்., குமரன்நகர் சந்திப்பில் இருந்து செம்மஞ்சேரி செல்லும் சாலையில், வாகனங்கள் அதிகமாக செல்லும். சில மாதங்களாக, மெட்ரோ ரயில் பணிக்காக கனரக வாகனங்கள், அதிக எண்ணிக்கையில் செல்கின்றன. இந்த சாலையில் திரும்பும் இடத்தில், மழைநீர் வடிகால் உள்ளது. அதில் உள்ள மூடி, பாரம் தாங்காமல் சிதைந்து எலும்புக்கூடாக உள்ளது. பைக், சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் நிலைதடுமாறுகின்றன. இரவில் பாதசாரிகளும் பள்ளத்தில் சிக்குகின்றனர்.மூடி சேதமடைந்து பத்து நாட்கள் ஆகியும் மாற்றவில்லை. பெரிய அளவில் அசம்பாவிதம் நடைபெறும் முன், மூடியை மாற்ற வேண்டும்.- பி.வீரமணி, பெரும்பாக்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ