மேலும் செய்திகள்
25 கிலோ கஞ்சா சிக்கியது கேரள வாலிபர்கள் கைது
07-Dec-2024
அண்ணா நகர், வட மாநிலங்களில் இருந்து, ரயில் வாயிலாக சென்னைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக, அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்க துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, பெரம்பூர் ரயில் நிலையம் அருகே, போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக ரயிலில் இருந்து இறங்கி, பேருந்து ஏறச் சென்ற நபரை மடக்கி விசாரித்தனர்.அதில், பிடிபட்ட நபர், திருவள்ளூர் மாவட்டம், பாண்டியநல்லுாரை சேர்ந்த கார்த்திக், 26, என, தெரியவந்தது. அவரது பையை சோதனை செய்த போது, அதில், 2 கிலோ கஞ்சா இருந்தது.மேலும் அவர், ஒடிசா மாநிலம் சென்று, ரயில் வாயிலாக கஞ்சா வாங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
07-Dec-2024