உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாலிபரிடம் வழிப்பறி பெண்ணுக்கு வலை

வாலிபரிடம் வழிப்பறி பெண்ணுக்கு வலை

எழும்பூர், எழும்பூர் ரயில் நிலையத்தில் உணவு விற்பனையாளராக பணிபுரிபவர் மாசூன், 35. இவர், நேற்று அதிகாலை நண்பர் மோனோ சிங் வேலை முடிந்து, எழும்பூர் ரயில் நிலையம் அருகே நடந்து சென்றனர்.அப்போது பெண் உட்பட நான்கு பேர், மாசூனை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவர் மறுக்கவே, அந்த பெண், மாசூனின் தலை, கைகளில் பிளேடால் கிழித்தார். பின், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது.அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாசூன் அளித்த புகாரின்படி, தப்பிச் சென்ற பெண் உட்பட நான்கு பேரை, எழும்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ