உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விடுதிக்குள் நுழைந்து பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர் சிக்கினார்

விடுதிக்குள் நுழைந்து பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர் சிக்கினார்

திருமங்கலம்,விடுதிக்குள் நுழைந்து, பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மேற்கு அண்ணா நகர், 21வது பிரதான சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி, நகைக்கடையில் பணிபுரிபவர் ஹரிணி, 23. கடந்த 20ம் தேதி அதிகாலை, அறையில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது சத்தம் கேட்டுள்ளது. எழுந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் அறைக்குள் திருட முயன்று, தப்பியோடியது தெரிந்தது. அவரை பிடிக்க முயன்றபோது, ஹரிணியிடம் கத்தியை காட்டி மிரட்டி, ஒரு சவரன் செயின் மற்றும் 300 ரூபாயை பறித்து தப்பினார். இது குறித்து திருமங்கலம் போலீசார் விசாரித்தனர். இதில், மேற்கு முகப்பேரை சேர்ந்த சுப்பிரமணி, 27, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து, ஒரு சவரன் தங்க நகை, மூன்று மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், சுப்பிரமணி சில நாட்களுக்கு முன் ஹரிணி தங்கியிருந்த விடுதியிலேயே, மூன்று மொபைல் போன்களை திருடியவர் என்பது தெரிந்தது. இவர் மீது ஏற்கனவே திருட்டு, வழிப்பறி உட்பட ஏழு வழக்குகள் உள்ளன. விசாரணைக்கு பின், அவர் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை