உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தலைமறைவு குற்றவாளி கைது

தலைமறைவு குற்றவாளி கைது

தரமணி,தரமணி, கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் ஞானவேல், 34. கடந்த ஆண்டு ஏப்., மாதம், தரமணி, எம்.ஜி.ஆர் சாலை, ரயில்வே பாலம் கீழ், நண்பர்களுடன் மது அருந்தினார்.அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், கட்டையால் தாக்கப்பட்டு ஞானவேல் கொலை செய்யப்பட்டார். தரமணி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.இக்கொலை வழக்கு தொடர்பாக, பெருங்குடியைச் சேர்ந்த கோபி, 29, சரித்திர பதிவேடு குற்றவாளியான கோட்டீஸ்வரன், 35, தர்மராஜ், 39, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில் கடந்த ஆண்டு அக்., மாதம் ஜாமினில் வந்த கோடீஸ்வரன் தலைமறைவானார். இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றம் கோட்டீஸ்வரனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உத்தரவிட்டது.நேற்று, அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி