உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாம்பரம் - மதுரை ரயிலில் கூடுதலாக 4 பெட்டி இணைப்பு

தாம்பரம் - மதுரை ரயிலில் கூடுதலாக 4 பெட்டி இணைப்பு

சென்னை, தாம்பரம் - மதுரை இடையே இயக்கப்படும் விரைவு ரயில்களில் நான்கு பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளது.தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை: * மதுரை - தாம்பரம் இடையே வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும் வாரந்திர விரைவு ரயிலில், ஏப்., 26ம் தேதி வரை 3ம் வகுப்பு மூன்று 'ஏசி' பெட்டிகளும், ஒரு முன்பதிவு பெட்டியும் இணைத்து இயக்கப்படும்.* தாம்பரம் - மதுரை இடையே வெள்ளி, ஞாயிறுகளில் இயக்கப்படும் வாரந்திர விரைவு ரயிலில் இன்று முதல் ஏப்., 27ம் தேதி வரை 3ம் வகுப்பு மூன்று ஏசி பெட்டிகளும், ஒரு முன்பதிவு பெட்டியும் இணைத்து இயக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை