உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆலந்துார் மெட்ரோவில் கூடுதல் பார்க்கிங் வசதி

ஆலந்துார் மெட்ரோவில் கூடுதல் பார்க்கிங் வசதி

சென்னை : ஆலந்துார் மெட்ரோ ரயில் நிலையத்தில், மேம்படுத்தப்பட்ட வாகன நிறுத்த வசதியை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி, நேற்று திறந்து வைத்தார்.இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:ஆலந்துார் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, எம்.ஜி.ஆர்., சிலைக்கு பின்புறம், நிலையத்தின் மறுபுறம் அமைந்துள்ள இடத்தில், வாகன நிறுத்துமிடம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு கூடுதலாக 300 இருசக்கர வாகனங்கள் நிறுத்த முடியும்.தற்போது, ஆலந்துார் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் 1,300 இருசக்கர வாகனங்களும், 180 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்த முடியும். இந்த கூடுதல் இடம் பயணியருக்கு வசதியாக இருக்கும் இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை