உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆதிசங்கரர் கோவில் கும்பாபிேஷகம் விமரிசை

ஆதிசங்கரர் கோவில் கும்பாபிேஷகம் விமரிசை

ஊத்துக்கோட்டை, அம்பத்துாரில் ஜகத்குரு ஸ்ரீவேத காவ்ய வித்யா பவனம் என்ற அமைப்பு துவக்கப்பட்டது. இதன் நிறுவனர் சந்திரமவுலி ஸ்ரவுதிகள்.கடந்த 2012ல், சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி பாரதீ தீர்த்த மஹா சுவாமிகள், இந்த பாடசாலைக்கு வருகை தந்தார். அப்போது, இந்த அமைப்பிற்கு பெரிய வளாகம் ஏற்பட ஆசி வழங்கினார்.அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் குருவாயல் கிராமத்தில், ஜகத்குரு ஸ்ரீவேத காவ்ய வித்யா பவனம் அமைப்பு இயங்கி வருகிறது. இந்த பவனத்தில் ஸ்ரீ ஆதிசங்கரருக்கு கோவில் அமைக்க, சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதிகள் உத்தரவிட்டனர். அதற்கான பொறுப்பு, சென்னை ஸ்ரீ வித்யா தீர்த்த பவுண்டேஷனிடம் ஒப்படைக்கப்பட்டது.கடந்த 2021 டிச., 2ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. திருப்பணிகள் பூர்த்தியான நிலையில், நேற்று கும்பாபிேஷகம் நடந்தது.கோவிலில் வைக்கப்பட்ட புதிய விக்ரகத்தை, சிருங்கேரி சாரதா பீடாதிபதிகளான பாரதீ தீர்த்த மஹா சுவாமிகள், விதுசேகர பாரதீ சுவாமிகள் ஆகியோர் பூஜித்து வழங்கி உள்ளனர். நேற்று காலை 9:00 மணிக்கு கும்பாபிேஷகம் நடந்தது. இதுதொடர்பான கல்வெட்டை, நெரூர் ஸ்ரீவித்யா நரசிம்ம ஆசிரமத்தை சேர்ந்த ஸ்ரீவித்யா சங்கர சரஸ்வதி சுவாமிகள் திறந்து வைத்தார். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை