உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விவசாய நிலம் எடுக்க எதிர்ப்பு 19ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

விவசாய நிலம் எடுக்க எதிர்ப்பு 19ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

சென்னை:'தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், 600 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த, அரசு முயற்சிப்பதைக் கண்டித்து, வரும், 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாடம்பாக்கத்தில், 520 ஏக்கர்; பரங்கிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரம்தென் ஊராட்சியில், 22 ஏக்கர்; மதுரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கோயிலாஞ்சேரியில், 58 ஏக்கர் என, மொத்தம் 600 ஏக்கர் விவசாய நிலங்களை, சி.எம்.டி.ஏ., வாயிலாக, தி.மு.க., அரசு கையகப்படுத்த முயற்சிக்கிறது. இதற்கான அறிவிப்பை, கடந்த மார்ச் 14ல், செங்கல்பட்டு மாவட்ட அரசிதழ் வெளியிட்டது. இதன் வாயிலாக, காலம் காலமாக விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயிகளின் நிலங்களை அபகரித்து, 40 சதவீத நிலத்தில் சாலைகள், பூங்காக்கள், பள்ளிகள் போன்றவற்றை மேம்படுத்தி, மீதமுள்ள, 60 சதவீத நிலத்தை விவசாயிகளுக்கு திருப்பித்தர உள்ளதாகக் கூறப்படுகிறது.நில உரிமையாளர்களுக்கு, 60 சதவீத நிலத்தை எதன் அடிப்படையில் திருப்பித் தருவீர்கள் என்று கேட்டால், அதிகாரிகளிடம் பதில் இல்லை. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் எண்ணத்துடனும், வணிக நோக்கத்துடனும் நிலங்களை அபகரிக்க முயலும் தி.மு.க., அரசைக் கண்டித்து, அ.தி.மு.க., செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில், வரும் 19ம் தேதி காலை 10:00 மணியளவில், பதுவஞ்சேரி-மப்பேடு சந்திப்பில், மாவட்ட செயலர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு பழனிசாமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை