உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அ.தி.மு.க., நலத்திட்டம் கூட்டத்தில் தள்ளுமுள்ளு

அ.தி.மு.க., நலத்திட்டம் கூட்டத்தில் தள்ளுமுள்ளு

திருவொற்றியூர், சென்னை, திருவொற்றியூர் தனியார் மண்டபத்தில், எம்.ஜி.ஆர்., பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் தொகுதியில், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், அ.தி.மு.க., அமைப்பு செயலர் மனோ, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலர் மூர்த்தி, பகுதி செயலர்கள் குப்பன், பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்று, 1,000 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த ஆட்டோ ஓட்டுனர்கள், திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் தனியார் மண்டபம் செல்லும் வழியிலேயே ஆட்டோக்களை நிறுத்தியதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தனியார் பள்ளி மாணவர்களுக்கும் சிரமம் ஏற்பட்டது. மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது, ஆட்டோ ஓட்டுனர்கள் முண்டியடித்ததால், கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.கூட்டத்தை ஒழுங்குபடுத்த முடியாமல், அ.தி.மு.க.,வினர் மட்டுமின்றி, போலீசாரும் கடும் சிரமப்பட்டனர்.கூட்ட நெரிசலில் சிக்கிய அ.தி.மு.க., தொண்டர் ஒருவர், மேஜையில் வைக்கப்பட்ட மின்விசிறியில் எதிர்பாராத விதமாக கையை விட்டார். மின்விசிறி சுவரில் மோதி அந்த இடமே பரபரப்பானது. பின், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டது. ஒரு மணி நேரம் குழப்பத்திற்குப் பின், கூட்டம் கட்டுக்குள் வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை