உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கூட்டணி யாருடன்? தீவிர ஆலோசனையில் வாசன்

கூட்டணி யாருடன்? தீவிர ஆலோசனையில் வாசன்

லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., அல்லது பா.ஜ., வுடன் கூட்டணி அமைப்பது குறித்து, கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஓட்டெடுப்பு நடத்தி முடிவெடுக்க, த.மா.கா., தலைவர் வாசன் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.வாசன் தற்போது, ராஜ்யசபா எம்.பி.,யாகவும், உரிமை மீறல் விசாரணை குழு உறுப்பினராகவும் உள்ளார்.கடந்த ஒன்பது ஆண்டுகளாக, பா.ஜ., கட்சிக்கு ஆதரவு அளித்து வரும் வாசனுக்கு, மத்திய அமைச்சர் பதவி வழங்க, பிரதமர் மோடி தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் தம்பிதுரை, ரவீந்திரநாத், பா.ம.க., தலைவர் அன்புமணி போன்றவர்களும் மத்திய அமைச்சர் பதவியை கேட்டதால், வாசனுக்கு அமைச்சர் பதவி வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.லோக்சபா தேர்தலில், பா.ஜ., அணி வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்தால், பா.ஜ., அமைச்சரவையில், வாசனும் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வரும் 22ம்தேதி, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் வாசன் பங்கேற்க வேண்டும் என, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா சார்பில் அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.எனவே, பா.ஜ.,வுடன் கூட்டணி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக வாசன் கருதுகிறார். அதே வேளையில், அ.தி.மு.க.,வுடன் நெடுநாள் உறவு நீடிப்பதால், அக்கட்சியை விட்டுக் கொடுக்காமல், பா.ஜ., - அ.தி.மு.க., உறவை மீண்டும் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடலாம் என்ற எண்ணமும், வாசனுக்கு இருக்கிறது.இன்னும் சில வாரங்களில், அதற்கான சந்தர்ப்பம் ஏதும் அமையாமல் போனால், அடுத்த மாதம், கட்சியின் செயற்குழு கூட்டத்தைக் கூட்டி, அதில் ஓட்டெடுப்பு நடத்தி, கூட்டணி குறித்து முடிவு செய்யலாம் என்றும், வாசன் திட்டமிட்டுள்ளார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

பைரவர் சம்பத் குமார்
ஜன 16, 2024 22:52

1). அஇஅதிமுக உடன் கூட்டு என்பது ரெடி மிக்ஸ் நூடுல்ஸ் போன்றது.2). பார்பதற்கு மற்றும் சுவை போன்ற தற்காலிக தீர்வாக இருக்கும்.3). ஆனால் வருங்காலத்தில் உடம்பிற்கு ஒத்துக் கொள்ளாது.4). லோக்கல் டவுன் பஸ் போன்று குறுகிய தூர பயணம் செய்ய அஇஅதிமுக டவுன் பஸ் போல் உதவும்.5). நெடுந்தூர பயணத்திற்கு பிஜேபியில் வசதி உள்ளது.6). மேலும் பிஜேபியில் இருந்தால் நெடுங்காலம் அரசியலில் வலம் வரலாம்.7). அஇஅதிமுக இருந்தால் கடலில் கரைத்த பெருங்காயம் போல் ஆகிவிடும்.8). மேலும் மோடியை நம்பினோர் கைவிடபடமாட்டார். இது மோடி கியாரண்டி.9). தங்கள் தகப்பனார் மூப்பனாரை பிரதமர் ஆவதை தடுத்தவர்கள் முதலாவதாக திமுக மற்றும் அஇஅதிமுக என்பதை மறந்துவிடக்கூடாது. மேலும் ஜீ.கே . வாசன் ஒன்றும் மூப்பனார் இல்லை.10). பாஜக உடன் பயணித்தால் இந்தமுறை மத்தியில் அமைச்சர் ஆக வாய்ப்பு உள்ளது என்பதை மறக்கூடாது.


g.s,rajan
ஜன 16, 2024 20:29

போணி ஆகல ,அவர் என்ன பண்ணுவார் பாவம் .....


raja
ஜன 16, 2024 19:40

Funny boy.


vbs manian
ஜன 16, 2024 16:44

சிரிப்பு வருது .


Hari
ஜன 16, 2024 16:02

ஆளே இல்லாத கட்சிக்கு பொதுக்குழு கூடினால் என்ன கூப்டாவிட்டால் என்ன ?


sankar
ஜன 16, 2024 19:21

கருணாநிதி கூட ரெண்டு சீட் ஜெயிக்கும்போது ஆழ் இல்லாத கட்சி தான்


PRAKASH.P
ஜன 16, 2024 15:58

Total waste of time


Sridhar
ஜன 16, 2024 12:51

இவரெல்லாம் ஒரு ஆளு அவருக்கு ஒரு கட்சி... கொஞ்சம் கூட கொள்கைப்பற்று இல்லாத அங்கேயா இங்கேயான்னு மேயுற ஆட்களையெல்லாம் பிஜேபி நிராகரிக்கவேண்டும். ஒவ்வொரு நிலையிலும் இவ்வாறு சமரசம் செய்துகொண்டு போவதால்தான் நாளை ஆட்சிக்கு வரும்போது நேர்மைக்கே சமரசம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும். மீண்டும் திருட்டு திராவிட ஆட்சியைப்போல் ஒரு ஆட்சி எக்காரணம் கொண்டும் வந்துவிடவே கூடாது. அக்கட்சியிலிருந்து தாவி வர நினைப்பவர்களையும் உள்ளே விடக்கூடாது. ஏற்கனவே சேர்ந்தவர்கள்கூட கொஞ்சம்கூட பங்களிப்பே இல்லாமல் எப்பொழுது ஆட்சிக்கு வருவோம் கைவைக்கலாம்ங்கற சிந்தனையோட உட்கார்ந்துகொண்டு இருக்கிறார்கள்.


g.s,rajan
ஜன 16, 2024 12:21

ஒப்புக்குச் சப்பாணி ...,


Vathsan
ஜன 16, 2024 11:43

பொதுக்குழுவை கூட்டுறீங்களா. இருக்குற நாலு பேரும் பூட்டு திறக்க, சேர் போட போயிட்டா வேற ஆளே கிடையாது. இதுல இந்த பில்டப் வேற.


nizamudin
ஜன 16, 2024 11:19

அதி தீவிர /எங்கே போவார் BJB க்கு


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ