உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடப்பாக்கம் ஏரி சீரமைப்பு ரூ.58.33 கோடி ஒதுக்கீடு

கடப்பாக்கம் ஏரி சீரமைப்பு ரூ.58.33 கோடி ஒதுக்கீடு

சென்னை, மழைக்காலத்தில் பெரு வெள்ள பாதிப்பை கட்டுப்படுத்தவும், மழைநீர் கடலில் சென்றடைவதை தடுத்து, நீர்நிலைகளில் சேமிக்கவும், சென்னை மாநகராட்சி, பல்வேறு நீர்நிலைகளை சீரமைத்து காக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.சென்னை மாநகராட்சியில், கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும், ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணியின் ஒரு பகுதியாக, ஆசிய வளர்ச்சி வங்கி, உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி மானிய நிதியில், கடப்பாக்கம் ஏரியில் சீரமைப்பு பணியை, 58.33 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ள, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.ஏரியை துார் வாரி, ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, கரையை உயர்த்தி அமைத்து, ஏரியின் கொள்ளளவை மூன்று மடங்காக அதிகரிக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது.மதகுகள் சீரமைத்தல், பல்லுயிர் வாழ்விடங்களை மேம்படுத்துதல், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஏரிக்கரையில் பசுமை தோட்டம் மற்றும் நடைபாதை அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணியால், ஏரியைச் சுற்றியுள்ளப் பகுதிகளில், மழைநீர் தேங்குவது தவிர்க்கப்படும். ஏரி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு, சீரான பாசன வசதி செய்து தரப்படும் என, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ