உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆவடி மாநகராட்சியிடம்  ஆம்புலன்ஸ் ஒப்படைப்பு

ஆவடி மாநகராட்சியிடம்  ஆம்புலன்ஸ் ஒப்படைப்பு

ஆவடி ஆவடி மாநகராட்சியில் ஏழு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 14 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணியர் மற்றும் நோயாளிகளுக்கு ஏற்படும் அவசர கால தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல், ஆட்டோக்களில் சென்று வரும் நிலை இருந்தது. இந்நிலையில், கடந்த 2022ல் தனியார் கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று ஆவடி மாநகராட்சியில் மருத்துவ நிகழ்ச்சிக்கு வந்த போது, ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க ஆவடி மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.அதன்படி, தனியார் நிறுவன சமூக பொறுப்பு நிதியில் இருந்து, 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டது. வாகன பதிவு முடிந்து, நேற்று காலை ஆவடி மாநகராட்சியிடம் ஆம்புலன்ஸ் வாகனம் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை