உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையில் நடைபாதையில் தூங்கியவர் மீது காரை ஏற்றி கொன்ற ஆந்திர எம்.பி., மகள் கைது

சென்னையில் நடைபாதையில் தூங்கியவர் மீது காரை ஏற்றி கொன்ற ஆந்திர எம்.பி., மகள் கைது

சென்னை: சென்னையில் நடைபாதையில் தூங்கிக் கொண்டு இருந்த இளைஞர் மீது காரை ஏற்றி கொன்றவர் ஆந்திர எம்.பி.,யின் மகள் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பிறகு அவரை ஜாமினில் போலீசார் விடுவித்தனர்சென்னை பெசன்ட் நகர், டைகர் வரதராச்சாரி சாலையோரமாக பிளாட்பாரத்தில் சிலர் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்து பிளாட்பாரத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஊரூர்குப்பம் பகுதியைச் சேர்ந்த சூர்யா(22) என்பவர் மீது ஏறியது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சூர்யாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், வழியில் அவர் உயிரிழந்து விட்டார்.விபத்தை பார்த்ததும் மக்கள் அந்த காரை மறிக்க முயன்றனர். காரில் இருந்த இரண்டு பெண்களும், காருடன் தப்பிச் சென்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். காரில் பெண்கள் இருந்ததாக சம்பவத்தை பார்த்தவர்கள் கூறினர்.விபத்தை ஏற்படுத்தியவர் ஆந்திராவின் ஓய்எஸ்ஆர் காங்., ராஜ்யசபா எம்.பி., பீடா மஸ்தான் ராவின் மகள் பீடா மாதுரி என தெரியவந்துள்ளது. சென்னை பெசன்ட் நகரில் வசிக்கும் பீடா மஸ்தான், புதுச்சேரியில் தொழில் செய்து வருகிறார். இதனையடுத்து பீடா மாதுரியை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

D.Ambujavalli
ஜூன் 19, 2024 06:21

பெரிய இடத்துக் ‘குழந்தைகள்’ ஏதோ ஒரு platform வாசிமேல் காரை ஏற்றி அவனது போராடும் அன்றாட கஷ்டங்களிலிருந்து ‘விடுதலை’ கொடுத்திருக்கிறாள் இம்மாதிரி அடிக்கடி நடக்கிறது ‘குடந்தையில்’ full irunthaarkale இருந்தார்களோ என்னவோ எம் பி மகள் என்றால் கேஸ் இருக்காது ஏமாளி டிரைவர் யாரும் கிடைக்க மாட்டார் இந்த கேசில்


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 18, 2024 21:14

தந்தை பெயர் மஸ்தான், மகளின் பெயர் மாதுரி, ஆந்திர எம்பி வசிப்பது சென்னை, தொழில் செய்வது புதுச்சேரி. ஒன்றும் புரியவில்லையே.


Bala
ஜூன் 18, 2024 20:20

தமிலுநாட்டில் ஆட்சியில் தெலுங்கர்கள் ஒன்றும் நடக்காது


Venkatasubramanian krishnamurthy
ஜூன் 18, 2024 19:45

ஆந்திரா எம்.பி.யாம். சென்னையில் வசிக்கிறாராம். புதுச்சேரியில் தொழில் செய்கிறாராம். யாருய்யா இவங்க பான் இந்தியாகாரங்க?


Mohanakrishnan
ஜூன் 18, 2024 19:08

Bail ready tomorrow


rsudarsan lic
ஜூன் 18, 2024 18:57

என்ன வேணா செய்ங்க ஆனா டாஸ்மாக் க மட்டும் மூடிடாதீங்க. தமிழ் நாட்டு மானமே அதில தான் இருக்கு. ஆனா கல்லு குடிப்பது வட நாட்டு வழக்கமா திராவிட வழக்கமா


Rajah
ஜூன் 18, 2024 18:43

பயம் வேண்டாம். தவைவர் இருக்காரு. அதுவும் மோடிக்கு எதிரான கட்சியைச் சேர்ந்தவர்கள்.


rsudarsan lic
ஜூன் 18, 2024 18:42

ஆந்திரா என்றவுடன் சந்திரா பாபு ஆளுன்னு நினைச்சிட்டு பிடிச்சிட்டாங்க. கேசவன் உண்டென்கில் கேவலம் தோஷமில்லை கேஸ் டிஸ்மிஸ்


Svs Yaadum oore
ஜூன் 18, 2024 18:36

பீடா மஸ்தான் ராவின் மகள் பீடா மாதுரி யா?? .....தெலுங்கில் பீடா என்றால் என்ன அர்த்தம் ??....


நிக்கோல்தாம்சன்
ஜூன் 18, 2024 18:23

பீடா அல்ல பாடை மாதுரியா ?


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை