உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பஸ்சில் போன் பறித்த ஆந்திர வாலிபர் கைது

பஸ்சில் போன் பறித்த ஆந்திர வாலிபர் கைது

தாம்பரம், தாம்பரத்தை அடுத்த நடுவீரப்பட்டு, எட்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன், 32. அடையாறில் உள்ள பிரின்ட் பேஷன் என்ற தனியார் நிறுவனத்தில், கட்டிங் மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.இவர், தினமும், தடம் எண்: 21ஜி என்ற பேருந்தில் வேலைக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம், வழக்கம் போல் பேருந்தில் ஏறினார். அப்போது, பிரபாகரனை இடித்துக்கொண்டே ஒருவர் இறங்கினார்.பேருந்தில் ஏறி நின்ற போது, சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் போன் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின், இது குறித்து, தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு, மொபைல் போன் திருடிய ஆந்திர மாநிலம், விஜயவாடாவை சேர்ந்த மைக்கேல் மகேஷ், 20, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை