மேலும் செய்திகள்
கோடைகால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
10-Apr-2025
சென்னை,கோடை கால விடுமுறையையொட்டி, திருச்சி - தாம்பரம் இடையே, வாரத்தில் ஐந்து நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.இது குறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:★ திருச்சியில் இருந்து வரும் 29 முதல் ஜூன் 29ம் தேதி வரை, செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில், காலை 5:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் நண்பகல் 12:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்★ தாம்பரத்தில் இருந்து மேற்கண்ட நாட்களில், மாலை 3:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் இரவு 10:40 மணிக்கு திருச்சி செல்லும். இந்த சிறப்பு ரயில்கள், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
10-Apr-2025