உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புழுதிவாக்கம் வீராங்கல் ஓடையில் தடுப்பு சுவர் கட்ட எதிர்பார்ப்பு

புழுதிவாக்கம் வீராங்கல் ஓடையில் தடுப்பு சுவர் கட்ட எதிர்பார்ப்பு

புழுதிவாக்கம், ஆலந்துார், பெருங்குடி ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், வடிகால் வழியாக செல்லும் மழைநீர், இறுதியாக வீராங்கல் ஓடைக்கு சென்று, அங்கிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தஞ்சமடைகிறது. அதன்பின், ஒக்கியம்மேடு வழியாக, கடலில் கலக்கிறது.இதில், புழுதிவாக்கம் பாலாஜி நகர் வழியாக செல்லும் 300 அடி நீளமுள்ள வீராங்கல் ஓடையில், தடுப்புச் சுவர் இல்லாததால், கரை ஓரத்தில் உள்ள மண் மேடுகள் சரிந்து, ஓடைக்குள் விழுந்து, நீரோட்டம் தடைபடுகிறது.சமூக ஆர்வலர் கோபிநாத், 74, கூறியதாவது:'மிக்ஜாம்' புயலுக்கு முன், ஓடை துார்வாரப்பட்ட போது, அதிலிருந்து சேகரிக்கப்பட்ட சகதி, மண், கற்கள் உள்ளிட்ட கழிவுகள், ஓடை ஓரமாகவே குவித்து வைக்கப்பட்டன. அவை இன்னும் அப்புறப்படுத்தப்படாததால், மீண்டும் ஓடைக்குள்ளேயே சரிந்து விழுகின்றன.புழுதிவாக்கம், பாலாஜி நகர் 17 மற்றும் 18வது தெரு வழியாக செல்லும் வீராங்கல் ஓடை ஓரமாக உள்ள மண் குவியல்களை அப்புறப்படுத்தி, 4 அடி உயரத்தில் தடுப்புச் சுவர் கட்ட, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி