உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மகளிர் உரிமை தொகைக்கு குவிந்த விண்ணப்பங்கள்

மகளிர் உரிமை தொகைக்கு குவிந்த விண்ணப்பங்கள்

அம்பத்துார், அம்பத்துார் மண்டலம், 82வது வார்டுக்கு உட்பட்ட 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், அம்பத்துார் -- செங்குன்றம் நெடுஞ்சாலை பகுதியில், நேற்று நடந்தது. இதில், மகளிர் உரிமைத்தொகை மற்றும் இதர சேவைகள் என, தனித்தனியே இரண்டு திருமண மண்டபங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டு இடங்களிலும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வெயிலையும் பொருட்படுத்தாமல், பெண்களும், முதியவர்களும் வரிசையில் காத்திருந்தனர். மொத்தமாக, பல்வேறு துறைகளை சார்ந்த, 4,243 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில், மகளிர் உரிமைத்தொகைக்கு, 2,796 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதர சேவைகளுக்காக 1,447 பேர் விண்ணப்பித்துள்ளனர். மகளிர் உரிமை தொகைக்கு, முந்தைய முகாம்களில் விண்ணப்பித்தவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க முகாமிற்கு வந்ததாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ