உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதல்வர் திட்ட முகாமில் வாக்குவாதம்

முதல்வர் திட்ட முகாமில் வாக்குவாதம்

வளசரவாக்கம்சென்னை, வளசரவாக்கம், 11வது மண்டலம், 145வது வார்டுக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் நேற்று, மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.இக்கூட்டத்தில், 145வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் சத்தியநாதன் பங்கேற்று, பகுதியில் உள்ள குறைகளை களையுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.அந்த நேரத்தில், அங்கிருந்த தி.மு.க., வட்ட செயலர் ஆலன் மற்றும் நிர்வாகிகள் சிலர், மனு கொடுக்க வந்த பெண்கள் சிலரை அவமதித்தாக தெரிகிறது.இதில் ஆத்திரமடைந்த சத்தியநாதன்,''நான் ஒரு கவுன்சிலர். இந்த முகாமில் பங்கேற்றது நியாயம். முதல்வர் திட்ட முகாமில் அரசு சாராத நபர்களை ஏன் உள்ளே விட வேண்டும்,'' என கேள்வி எழுப்பி உள்ளார்.இதனால் இவருக்கும், தி.மு.க., நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் ஏற்படும் சூழல் உருவானது. உடனே, அங்கிருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி, முகாமை நடத்தி முடிக்குமாறு கோரிக்கை வைத்தனர். ஆனாலும், முதல்வர் திட்ட முகாமில் அ.தி.மு.க., - தி.மு.க., ஆகியோர் இரு தரப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை