உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போலீசிடம் தகராறு வாலிபருக்கு காப்பு

போலீசிடம் தகராறு வாலிபருக்கு காப்பு

வியாசர்பாடி, சென்னை, வியாசர்பாடி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் கிருஷ்ணன். இவர் வியாசர்பாடி, எஸ்.எம்.நகர் பிரதான சாலையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டார்.அங்கு மதுபோதையில் இருந்த மர்ம நபர், காவலரை அநாகரிகமாக திட்டியதால் அவரை எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில் மீண்டும் மர்ம நபர் காவலர் கிருஷ்ணனிடம் தகராறில் ஈடுபட்டார்.இதுகுறித்து கிருஷ்ணன் கொடுத்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிந்து சம்பவத்தில் ஈடுபட்ட வியாசர்பாடியை சேர்ந்த முனியன், 34 என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி