உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உஷ்ணம் தணிக்க சாரல் பாயின்ட் வண்டலுார் பூங்காவில் ஏற்பாடு

உஷ்ணம் தணிக்க சாரல் பாயின்ட் வண்டலுார் பூங்காவில் ஏற்பாடு

தாம்பரம், வண்டலுார் உயிரியல் பூங்கா, 1,490 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய பூங்காவான இங்கு, பாலுாட்டிகள், ஊர்வன, பறவைகள் என, எட்டு வகையிலான, 2,400 விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.பூங்காவிற்கு, வார நாட்களில், 2,500 முதல் 3,000 வரையிலும், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், 7,500 முதல் 9,000 வரையிலும் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். தொடர் விடுமுறையின் போது, இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள், ஐந்து கி.மீ., துாரம் பேட்டரி வாகனத்திலும், நடந்து சென்றும் விலங்குகளை கண்டு ரசிக்கின்றனர்.தற்போது, வெயில் சுட்டெரித்து வருகிறது. அப்படியிருந்தும், பூங்காவிற்கு பார்வையாளர்கள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.விடுமுறை நாளான நேற்று, வழக்கத்தை காட்டிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. மற்றொரு புறம், பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் வெயிலின் உஷ்ணத்தை தாங்க முடியாமல் தவிக்கின்றனர்.இதை கருத்தில் கொண்டு, ஏழு இடங்களில், 'சாரல் பாயின்ட்' அமைக்கப்பட்டுள்ளது. வெயிலில் நடந்து செல்வோர், இந்த சாரல் பாயின்ட்டை பார்த்ததும், அங்கு சென்று, சிறிது நேரம் இளைப்பாறுவதோடு, சாரலில் நின்று உஷ்ணத்தை தணிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி