பைக் திருடியவர் கைது
வடபழனி:நெசப்பாக்கம், அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் துரைபாபு, 56. இவர், கடந்த மாதம் 25 ம் தேதி ஹோண்டா டியோ பைக்கில், குடும்பத்தினருடன் வடபழனி முருகன் கோவிலுக்கு சென்றார். வாகனத்தை நிறுத்தி விட்டு, சாவியை மறந்து எடுக்காமல் கோவில் உள்ளே சென்றார். பின், திரும்பி வந்து பார்த்த போது, வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.இதுகுறித்து புகாரையடுத்து, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளிடம் படி வடபழனி போலீசார் விசாரித்தனர். இதில், வாகனத்தை திருடிய, காஞ்சிபுரம், காமாட்சி அம்ன் சன்னதி தெருவை சேர்ந்த கணேஷ், 40 என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.தொடர் விசாரணையில், கணேஷ் கோயம்பேடு மற்றும் சூளைமேடு பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்து மூன்று பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.