உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருநங்கையை வெட்டி நகை பறித்தவர் கைது

திருநங்கையை வெட்டி நகை பறித்தவர் கைது

கே.கே.நகர், சென்னை, கே.கே.நகர், ஆற்காடு சாலையில் நேற்று முன் தினம் இரவு திருநங்கை ஒருவர், அங்கு சென்ற வாகன ஓட்டிகளிடம் யாசகம் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மூவரிடம், திருநங்கை யாசகம் கேட்டுள்ளார். போதையில் இருந்த அவர்கள், திருநங்கை கழுத்தில் கிடந்த 1 சவரன் செயினை பறித்துக்கொண்டு, அவரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பினர். அதிர்ச்சியடைந்த திருநங்கை அழுது புலம்பினார். அந்த வழியாக ரோந்து வந்த கே.கே.நகர் போலீசார், இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற நபர்களை விரட்டி சென்றனர். அதில் ஒருவர் மட்டும் சிக்கினார். விசாரணையில், அவர் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 29 என தெரிந்தது. மற்ற இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை