உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அஷ்டலட்சுமி கோவில் திருப்பணிகள் துவக்கம்

அஷ்டலட்சுமி கோவில் திருப்பணிகள் துவக்கம்

சென்னை, பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 1.41 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி துவங்கியது. இதை முன்னிட்டு, பாலாலயம் நேற்று நடந்தது.உபயதாரர்கள் நிதி வாயிலாக, 4.60 லட்சம் ரூபாயில் ஆஞ்சநேயர் சன்னிதி, தன்வந்திரி சன்னிதி மற்றும் சக்கரத்தாழ்வார் சன்னிதிகளும், 4.70 லட்சம் ரூபாய் மதிப்பில் குருவாயூரப்பன் சன்னிதி மற்றும் மடப்பள்ளி பழுதுபார்த்து, வர்ணம் தீட்டும் பணிகள் நடக்கவுள்ளன.கோவிலின் அனைத்து மரக்கதவுகளும், 33 லட்சம் ரூபாய் மதிப்பில் பழுதுபார்த்து புதுப்பித்தல்; 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கோவில் வடக்கு, தெற்கு பக்கங்களில் தரைதளம் அமைத்தல் என, மொத்தம் ஒன்பது பணிகள், 1.41 கோடி ரூபாயில் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பாரத இந்துத் தமிழன்
பிப் 16, 2024 22:20

அண்ணாமலையார் வாக்குறுதி தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்பொழுது, அறநிலையத்துறையின் (ஆனவக்)கட்டுப்பாட்டிலிருந்து, கோவில்கள் விடுபடும். இதனை இறை பக்திகொண்ட (வேஷதாரிகள் அல்ல) தமிழகத்தில் வாழும் அனைத்து இந்துமக்களும் பூரண மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு, அவர் கரத்தை வலுப்படுத்த தயாராக வேண்டும். கடவுள் இருக்கிறார் எனும் கொள்கையில் பிசகாத ( இருந்தால் நல்லா இருக்கும் என்னும் அரைவேக்காடுகள் வேண்டாம், சிவன் கோவில் தானே, எப்படியேனும் கெடட்டும், என்றும், பெருமாள் கோவில் தானே எப்படியும் போகட்டும் என்றும் மதியிருந்தும் மந்தி போல் வாழ்பவர் வேண்டாம்) அறு சமயத்தோர் அதாவது, கணபதி, முருகன், சிவன், பெருமாள், சக்தி, சூர்யன் மற்றும் இயற்கை தெய்வங்கள் வழிபடுவோர் அனைவரும் இந்த அரசியல் வாக்குறுதியை இறைவன் தந்த நற்செய்தியாக எண்ணி, அவருக்கு ஆதரவு தரவேண்டும். கட்சி வேறுபாடின்றி, இந்த வாக்குறுதிக்காக,அவரை தெய்வமகனாக எண்ணி அவருக்கு உறுதுணையாய் இருப்பது ஒவ்வொரு இந்துவின் கடமையாகும். கோவில்களின் வரவு செலவு ஆடிட்டிங்க் உண்டு. கோவில் வழிபாட்டில் மதச்சார்பற்ற அரசு தன் மூக்கை நுழைக்காமல் இருக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன்மீகசபை ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்தனியாக உருவாக்கி, அவ்வூர் மக்களுக்கு அதிகமுக்யத்துவம் கொடுத்து,முறையான வழிபாடு, கோவில் நிர்வாகத்தில் தூய்மை, கோவில் பராமரிப்பு, பக்தர்களுக்கான வசதி, வெளியூர், வெளிமாநில, வெளி நாடு பக்தர்களுக்கு போதிய வசதி, கார், வாகன பாதுகாப்பு, இலவச உணவு, தங்கும் இடம், கலை, பக்தி, இசை நாட்டியப்பயிற்சி, பக்தி இலக்கிய பாராயண நூல்களை மலிவு விலை அல்லது இலவசமாய் வழங்குதல், ஏழை இந்துக்களுக்கு கடன் வசதி, இலவச மருத்துவ வசதி போன்ற அறம்சார்ந்த பணிகள் எல்லாம் ஈசனருளால் நிறைவேற்றிட, ஸனாதனத்தை இழிவு படுத்தியும், பிற மதத்தைத் தூக்கிப்பிடித்தும், மதச்சார்பற்ற எனும்பெயரில் இந்துமதவிரோதப்போக்கைக் கடைப்பிடிக்கும் அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்க,அண்ணாமலைக்கு ஆதரவு தருவதே இந்து மக்களின் கடமையாகும். இராஜாக்கள் போற்றி வளர்த்த கோவில்களை, அந்த இடத்தில் அமரும் அமைச்சர்கள் பொறுப்பற்று இருப்பதால், ஆட்சிக்கட்டிலில் தூயவர்களை அதாவது கோவிலில் அரசு தலையிடாது என்று சொல்லும் உத்தமர்களைத் தேர்ந்தெடுபது நம் கடமையாகும். முன்னோட்டமாக பாராளுமன்றத்தில் அண்ணாமலை யாருக்கு வாக்களிக்கச் சொல்கிறார்களோ அவர்களை வெற்றிபெறச்செய்வது இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒன்று. நம்மதத்தின் வழிபாட்டுச்சின்னங்கள் நம் தலைமுறையில் பாழ்படாமல், பழைமைப் புகழுடன் ஆன்மீகம் செசித்தோங்க அண்ணாமலையாருக்கு ஆதரவுக்கரம் நீட்டுவோம். அஷ்ட லட்சுமி அருள் தமிழகம் முழுவது பரவட்டும். ஜெய்ஸ்ரீராம்


Balasubramanyan
பிப் 16, 2024 11:23

What is the role of HRC? HAS IT ALLOTED ANY MONEY.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை