உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீட்டின் முன் மது அருந்தியதை தட்டி கேட்டவர் மீது தாக்குதல்

வீட்டின் முன் மது அருந்தியதை தட்டி கேட்டவர் மீது தாக்குதல்

அயனாவரம்,:அயனாவரம், மதுரை தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ், 64. இவர், தனியார் மருத்துவமனையில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 25ம் தேதி நள்ளிரவு தன் வீட்டிற்கு முன் நிறுத்தியிருந்த தன் மகனின் பைக் மீது, அதே பகுதியை சேர்ந்த சுரேந்திரன் என்பவர் அமர்ந்து மது அருந்தினார்.இது குறித்து, பால்ராஜ் தட்டிக் கேட்டார். இதையடுத்து, சுரேந்திரன் பால்ராஜை கையால் அடித்து கழுத்தை நெரித்தார். அத்துடன், அவரது மகன் பைக்கை கல் மற்றும் கட்டையால் அடித்து சேதப்படுத்தினார்.மேலும், பால்ராஜ் மொபைல் போனை பறித்து கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து பால்ராஜ் நேற்று முன்தினம் அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இது குறித்து விசாரித்த அயனாவரம் போலீசார், சுரேந்திரன், 30, என்பவரை கைது செய்தனர். சுரேந்திரன் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை