உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.ஒரு கோடி கையாடல் ஏ.டி.எம்., ஊழியர் கைது

ரூ.ஒரு கோடி கையாடல் ஏ.டி.எம்., ஊழியர் கைது

பாண்டிசென்னை அடுத்த குன்றத்துாரைச் சேர்ந்தவர் கார்த்திக் குமார், 42. இவர், தி.நகர் கிரியப்பா சாலையில் உள்ள சி.எம்.எஸ்., என்ற தனியார் நிறுவனத்தில், மேலாளராக பணி செய்து வருகிறார்.இந்நிறுவனம், சென்னையில் உள்ள வங்கி ஏ.டி.எம்., மிஷின்களில் பணம் நிரப்பும் பணி மேற்கொண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் கணக்குகளை ஆய்வு செய்தபோது, அங்கு பணிபுரியும் பிரபு என்பவர், 1 கோடி ரூபாய் கையாடல் செய்தது தெரியவந்தது.இது குறித்து, கார்த்திக் குமார் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், ஆர்.ஏ.புரம், ராதாகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த பிரபு, 40, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.அவரிடம் இருந்து, 63.69 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை