தேசிய சாலை பாதுகாப்பு மாதம் அண்ணா நகரில் விழிப்புணர்வு
அண்ணா நகர்,தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம், ஜன., 1 முதல் 31ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம், 'ஹெல்மெட்' மற்றும் 'சீட் பெல்ட்' அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு, தினமும் ஏற்படுத்தப்படுகிறது.அந்த வகையில், அண்ணா நகர் வடமேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், அகர்வால் கண் மருத்துவமனை வாயிலாக நேற்று, சிறப்பு முகாம் நடந்தது. முகாமில், பொதுமக்கள், பணியாளர்கள் என, 150க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.அதேபோல், அரசு மற்றும்தனியார் பள்ளிகளிலும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. இந்நிழ்வில், ஆர்.டி.ஓ., பார்வேந்தன், ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் இருந்தனர்.