பேட்மின்டன் போட்டி இன்று துவக்கம்
சென்னை, சென்னை மாவட்ட அளவில் புதிய கிளப்களுக்கு இடையிலான பேட்மின்டன் சாம்பியன் போட்டி இன்று துவங்குகிறது.'டீம் 16 ஸ்போர்ட்ஸ் கிளப்' சார்பில், சென்னை மாவட்ட அளவில், பேட்மின்டன் புதிய கிளப் மற்றும் கிளப் சாரா பேட்மிண்டன் வீரர், வீராங்கனையருக்கு இடையிலான, பேட்மின்டன் போட்டி சென்னை, நீலாங்கரை அன்லீட்ச் பேட்மின்டன் மைதானத்தில் இன்று துவங்குகிறது. இதில், சென்னை மாவட்டத்தின் 100க்கும் அதிகமான அணிகள் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளன.இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர், வீராங்கனையர், மாநில, தேசிய போட்டிகளில் பதக்கம் பெற்றிருக்கக் கூடாது.இந்தப் போட்டி, 'லீக் கம் நாக் அவுட்' முறையில் நடக்கிறது. இதற்காக, அந்த கிளப் ஒற்றையர் பிரிவு போட்டிக்கு 700 ரூபாயும், இரட்டையர் பிரிவு போட்டிக்கு 1,100 ரூபாய் முன்பதிவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.