மாரத்தானில் வங்கி ஊழியர் உயிரிழப்பு
சென்னை: புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, சென்னை கோட்டூர்புரம் அண்ணா பல்கலையில், நேற்று மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடந்தது.போட்டியில், தாம்பரத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பரமேஷ், 24 என்பவரும் பங்கேற்றார். மாரத்தான் ஓட்டம் துவங்கியபோதே வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அங்கு முன்னேற்பாடாக நிறுத்தப்பட்டு இருந்த, அவசர கால '108' ஆம்புலன்ஸ் வாகனம் வாயிலாக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள், பரமேஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.