உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மத்திய அரசு சட்ட தொகுப்பை வரவேற்று, கோஷங்கள் எழுப்பிய பாரதீய மஸ்துார் சங்கம்

மத்திய அரசு சட்ட தொகுப்பை வரவேற்று, கோஷங்கள் எழுப்பிய பாரதீய மஸ்துார் சங்கம்

சென்னைமத்திய அரசின் நான்கு சட்ட தொகுப்புகளை வரவேற்பு தெரிவித்து, பாரதீய மாநகர அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் கோஷயங்கள் எழுப்பினர். இது குறித்து அந்த சங்கத்தின் பொதுசெயலர் ராஜேஷ், அமைப்பு செயலாளர் விஜயகுமார் ஆகியோர் கூறியதாவது: நாட்டில் தொழிலாளர்களுக்கான, 29 மத்திய சட்டங்களை நான்கு வகைகளாக தொகுத்து கடந்த நவ., 21ம் தேதி மத்திய அரசு அமல்படுத்தியது. அதாவது, ஊதிய தொகுப்பு, சமூக பாதுகாப்பு, தொழிலாளர் உறவுகள் தொகுப்பு, பணியிட பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைமைகள் தொகுப்பு என அமல்படுத்தி உள்ளது. இந்த சட்டத் தொகுப்புகளை வரவேற்று, தொழிலாளர்களிடம் நோட்டீஸ் வழங்கி, கோஷங்களை எழுப்பி வரவேற்கிறோம். குறிப்பாக, குறைந்தபட்ச ஊதிய உயர்வு, பணி நேரம் எட்டு மணி நேரம், கூடுதலாக பணியாற்றினால் கூடுதல் ஊதியம், சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை வரவேற்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்து வருகிறோம். தொழில் உறவுகள் தொகுப்பில், சில சரத்துக்களை திருத்தம் செய்ய வேண்டும் என மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை