உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நிலமோசடி வழக்கு பா.ஜ., நிர்வாகி கைது 

நிலமோசடி வழக்கு பா.ஜ., நிர்வாகி கைது 

செங்குன்றம்,:நொளம்பூரைச் சேர்ந்த பா.ஜ., நிர்வாகி 'மின்ட்' ரமேஷ், 51. இவர் மீது, புழலைச் சேர்ந்த வேணு என்பவர், அரசு நிலங்களை மடக்கி, போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்வதாக புகார் அளித்தார். இதையடுத்து ரமேஷுக்கு சொந்தமான இடங்களில், கொளத்துார் காவல் மாவட்ட துணை கமிஷனர் பாண்டியராஜன் தலைமையிலான போலீசார், நேற்று அதிகாலை சோதனை நடத்தினர்.குறிப்பாக, ரமேஷுக்கு சொந்தமான அம்பத்துார், சூரப்பட்டு, மாதவரம், செங்குன்றம் உட்பட ஒன்பது இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை