உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.மு.க., - எம்.பி., மீது போலீசில் பா.ஜ., புகார்

தி.மு.க., - எம்.பி., மீது போலீசில் பா.ஜ., புகார்

சென்னை, மத்திய உள்துறை அமைச்சரை தரக்குறைவாக விமர்சித்த, தி.மு.க., - எம்.பி., ராஜா மீது நடவடிக்கை கோரி, தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு சார்பில், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தி.மு.க., - எம்.பி., ராஜா பேசுகையில், 'தமிழகத்தை பிடிக்கப்போவதாக உள்துைறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். அவர் ஒரு முட்டாள்' என, பேசினார்.இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தரக்குறைவாக பேசிய, தி.மு.க., - எம்,பி., ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழக பா.ஜ., துணை தலைவரும், வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த பால்கனகராஜ், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ